முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்த 55,000 மாற்றுக்கட்சியினர்.. முக்கிய நிர்வாகிகள் யார் யார்?
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக கொங்கு மண்டல பகுதிக்கு சென்றுள்ளார். அதில் இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலுள்ள ஆச்சிப்பட்டி பகுதியில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னணியில் மாற்றுக்கட்சியினர் 55,000 பேர் இணையும் விழா நடைபெற்றது. இதில் அ.தி.மு.க., பா.ஜ.க., தே.மு.தி.க., உள்ளிட்ட பல கட்சிகளின் உறுப்பினர்கள் திமுகவில் இணைந்தனர்.
இதில்,
அ.தி.மு.க-வில் 10 ஆண்டு காலமாக இருந்த கவுண்டம்பாளையம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., வி.சி.ஆறுக்குட்டி
அ.தி.மு.க-வின் மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்த அபிநயா
தே.மு.தி.க-வில் 15 ஆண்டு காலமாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ-வும், மாவட்ட செயலாளருமான பனப்பட்டி தினகரன்
பா.ஜ.க-வில் 22 ஆண்டு காலமாக இருந்து, மாநில மகளிர் அணி செயலாளராக இருந்த மைதிலி
ம.நீ.ம-வின் மாவட்ட தலைவராக இருந்த வினோத் குமார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முதலமைச்சர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
மேலும் இவர்களுடன் மாநில நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை, ஊராட்சிமன்ற தலைவர்கள், துணைத்தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் என நிர்வாகிகள் மட்டும் 952 பேர் திமுகவில் இணைந்துள்ளனர்.
அதோடு , அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, ம.நீ.ம, அ.ம.மு.க, உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 55,000 பேர் திமுகவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தங்களை இணைத்துள்ளனர்.