முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மிகப்பெரிய தொகை வழங்கியுள்ள லைகா நிறுவனம்!

0
162
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (19.6.2021) தலைமைச் செயலகத்தில், லைகா புரோடக்சன்ஸ் திரு.சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் அதன் முதன்மை செயல் அலுவலர் திரு.ஜி.கே.எம். தமிழ்குமரன், இயக்குனர் திரு.ராஜாசுந்தரம் நிருதன் மற்றும் திரு.கெளரவ் சச்ரா ஆகியோர் சந்தித்து, கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்கள். உடன் சட்டமன்ற உறுப்பினர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உள்ளார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு மிகப்பெரிய தொகை வழங்கியுள்ள லைகா நிறுவனம்!

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் தற்போது மெல்ல மெல்லமாக குறைய துவங்கியுள்ளது. கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்கியுள்ளனர்.

அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘கோவிட் தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது, அதற்காக அனைவரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாரளமாக நன்கொடை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். மேலும் இந்த நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் அனைத்தும் வெளிப்படையாகப் பொதுவெளியில் வெளியிடப்படும் என்று தெரிவித்திருந்தார்

இதனை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும், பொது மக்களும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நன்கொடையை வழங்கி வந்தனர். இந்த நிலையில லைகா புரொடக்சன்ஸ் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களின் சார்பில் கொரோனா நிவாரண பணிக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூபாய் 2 கோடி காசோலையை வழங்கியுள்ளனர்.