மாணவி பலி.. மய்யம் அறிக்கை.. ஆக்கிரமிப்பு அகற்றம்

0
221

மாணவி பலி.. மய்யம் அறிக்கை.. ஆக்கிரமிப்பு அகற்றம்

76 வது சுதந்திர தினத்தன்று பள்ளி சென்று திரும்பிய மாணவி சாலை ஆக்கிரமிப்பால் பலியானது குறித்தும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் மக்கள் நீதி மய்யத்தின் மாணவர் அணி சார்பாக நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இன்று காவல்துறையின் உதவியோடு அங்கே ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த உடனடி நடவடிக்கை வரவேற்புக்குரியது. அதேநேரம் இன்று அகற்றப்பட்ட ஆக்கிரமிப்பு நாளையே மீண்டும் நடக்க வாய்ப்புள்ளது. எனவே இந்த விஷயத்தில் அரசின் தொடர் கண்காணிப்பு அவசியம். அத்துடன் இதுபோல் இன்னொரு பலி ஏற்படாமல் தடுத்திடும் வண்ணம் தமிழகமெங்குமுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும்.