“புரட்சியாளர்களுக்கு அஞ்சலி” என்ற தலைப்பில் 623 மாவட்டங்களில் தியாகிகள் தினம்  கடைப்பிடிக்க நேரு யுவகேந்திரா சங்கதன் ஏற்பாடு செய்துள்ளது

0
212

“புரட்சியாளர்களுக்கு அஞ்சலி” என்ற தலைப்பில் 623 மாவட்டங்களில் தியாகிகள் தினம்  கடைப்பிடிக்க நேரு யுவகேந்திரா சங்கதன் ஏற்பாடு செய்துள்ளது

புதுதில்லிவிடுதலைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 623 மாவட்டங்களில் மார்ச் 23-ம் தேதி அன்று தியாகிகள் தினம் கடைப்பிடிக்க நேரு யுவகேந்திர சங்கதன் ஏற்பாடு செய்துள்ளது. இதில் நேரு யுவகேந்திராவைச் சேர்ந்த பெருமளவிலான இளைஞர் தன்னார்வலர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர்.

கடந்த 1931ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட தினம் இந்நாளில்  நினைவு கூரப்படுகிறது. நாட்டிற்காக துணிச்சலுடன் போராடி தியாகம் செய்த புரட்சியாளர்களை  நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 23ம் தேதி தியாகிகள் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழக்கை வரலாற்றையும் அவர்களது பணிகளையும் கொண்டாடுவதன் மூலம், இளைய தலைமுறையினருக்கு தங்களது கடமையை அறியச் செய்வதே இந்த நிகழ்ச்சியின் நோக்கமாகும். இளைஞர்களிடையே தேசப்பக்தியும், தேசியவாதமும் உருவாகி, ஊக்கப்படுத்துவதன் மூலம் நாட்டைக் கட்டமைப்பதில் அவர்களை மேலும் பங்கேற்கச் செய்ய முடியும்.

பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்தல், விளக்கேற்றுதல், கருத்தரங்குகள் உள்ளிட்ட நிகழ்ச்சியில் நடைபெற உள்ளன. அவர்களுடைய வாழ்க்கை வரலாறு குறித்த விளக்கவுரைகளும் நடைபெற உள்ளன. மேலும், உறுதிமொழி எடுத்தல், விளையாட்டு, வினாடி வினா, பொது அறிவு போட்டிகள் உள்ளிட்டவற்றுக்கும் நேரு யுவகேந்திரா ஏற்பாடு செய்துள்ளது.