பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – முதலமைச்சர் பழனிசாமி
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கு இன்னும் 2 நாட்களில் நிறைவடைய உள்ளதால், ஊரடங்கை நீடிப்பதா இல்லையா என்பது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் காணொளி வாயிலாக முதலமைச்சர் பேசியதாவது:-
* பிளாஸ்மா சிகிச்சையின் மூலம் குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது
* வீடு வீடாக சென்று பரிசோதனை நடத்தப்படுகிறது.
* கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
* நாளொன்றுக்கு 63 ஆயிரம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.
* மருத்துவ உபகரணங்கள் தேவையான அளவில் கையிருப்பில் உள்ளன.
* கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மக்களுக்கு எதிர்ப்பு சக்தி மருந்துகள் சித்த மருந்தான கபசுர குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுகிறது.
* தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது
* ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது
* ஆக.5 முதல் ரேஷன் கடைகளில் விலையில்லா முகக் கவசங்கள் வழங்கப்படும்.
* இந்தியாவிலேயே கொரோனா காலத்திலும் அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழகம்தான்.
* சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த 46 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளன.
* தமிழகத்தில் இருந்து 4 லட்சத்திற்கும் அதிகமான பிற மாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்
* கொரோனா பரவலை தடுக்க பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
* கொரோனா பரிசோதனையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
* தமிழகத்தில் இதுவரை 24.7 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.