‘பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கணும்’ – பிரான்ஸ் நிபுணரின் ஆலோசனைக்கு ரகுராம் ராஜன் கொடுத்த பதில்!

0
55

‘பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கணும்’ – பிரான்ஸ் நிபுணரின் ஆலோசனைக்கு ரகுராம் ராஜன் கொடுத்த பதில்!

பிரான்சைச் சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கட்டி சொன்ன கருத்துக்கு ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பதிலளித்துள்ளார்.

”இந்தியாவில் ஏழை – பணக்காரர் இடைவெளி அதிகமாக உள்ள நிலையில் பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதித்து பிரச்னையை சரி செய்ய முயற்சிக்க வேண்டும்” என பிரான்சை சேர்ந்த பிரபல பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கட்டி அண்மையில் கூறியிருந்தார். ”10 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து மதிப்புள்ள தனி நபர்களுக்கு ஆண்டுக்கு 2% சூப்பர் ரிச் வரி விதிக்கலாம்” என அவர் தெரிவித்திருந்தார். மேலும் வாரிசு வழி சொத்து வரியாக 33% விதிக்கவேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

”ஆனால் இது யானைப்பசிக்கு சோளப்பொரி போன்றது” என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கிண்டலடித்துள்ளார். பெரும் பணக்காரர்களுக்கு வரி போட்டு திரட்டப்பட்ட தொகை எங்கு பயனுள்ளதாக இருந்துள்ளது என்பதை பிக்கட்டியிடமே கேளுங்கள் என ஆங்கில இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். நிதி ஆதாரங்களை திறம்பட கையாளுவதே பிரச்னைகளுக்கு தீர்வை தரும் என்றும் அவர் கூறியுள்ளார்.