நில அதிர்வு குறித்து அசாம் முதல்வருடன் பிரதமர் உரையாடல், அனைத்து உதவிகளும் அளிப்பதாக உறுதி

0
168

நில அதிர்வு குறித்து அசாம் முதல்வருடன் பிரதமர் உரையாடல், அனைத்து உதவிகளும் அளிப்பதாக உறுதி

பிரதமர் திரு.நரேந்திர மோடி, அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட நிலஅதிர்வு குறித்து அம்மாநில முதல்வர் திரு.சர்பானந்த சோனோவாலுடன் பேசி நிலைமையை கேட்டறிந்தார்.

திரு.மோடி சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், “அசாம் மாநிலத்தின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள நிலஅதிர்வு குறித்து அம் மாநில முதல்வர் திரு.சர்பானந்த சோனோவால் அவர்களுடன் பேசினேன். அசாம் மாநிலத்திற்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதி அளித்துள்ளேன். அசாம் மக்களின் நலத்திற்காக நான் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார்.