நாட்டில் உள்ள 123 நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் இருப்பு நிலவரம்
புதுதில்லி, செப்டம்பர் 05, 2020
நாட்டில் உள்ள 123 நீர்த்தேக்கங்களின் நீர் இருப்பை மத்திய நீர் ஆணையம் வாரமொரு முறை கண்காணித்து வருகிறது. இதில் 43 நீர்த்தேக்கங்களில் 60 மெகாவாட்டுக்கும் அதிக திறனுள்ள ஹைட்ரோ மின்சக்தி உற்பத்தித் திறன் நிறுவப்பட்டுள்ளது.
இந்த 123 நீர்த்தேக்கங்களின் தற்போதைய மொத்த நீர் கொள்ளளவு 171.091 BCM ஆகும். தற்போதைய நிலவரப்படி, இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் இருப்பு 139.158 BCM ஆகும். இது மொத்த கொள்ளளவில் 81 சதவீதம் ஆகும்.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இந்த நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் இருப்பு 134.425 BCM ஆகும். கடந்த 10 ஆண்டுகளின் மொத்த நீர் இருப்பு சராசரி 116.268 BCM ஆகும்.