நவ.10 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு

0
238

நவ.10 முதல் தியேட்டர்களை திறக்க அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதையடுத்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், அந்த தளர்வுகளில் தமிழகத்தில் உள்ள திரையரங்குகளை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இதற்கிடையில், தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்க உறுப்பினர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சமீபத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க அனுமதி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நம்பவர் 30-வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஊரடங்கில் கொடுக்கப்பட்டுள்ள தளர்வுகளில் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. நவம்பர் 10-ம் தேதி முதல் தியேட்டர்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தியேட்டர்கள் 50% இருக்கைகளுடன் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.