நமது மக்களின் மீள்திறனை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்: பிரதமர்
புதுதில்லி, இந்தியர்களின் மீள்திறனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மக்களின் தைரியமும், உணர்வும் நம் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இந்திய சிறுபான்மையினர் அறக்கட்டளையின் காணொலி இடுகையைப் பகிர்ந்து, அவர் தெரிவித்ததாவது:
“நமது மக்களின் மீள்திறனை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். அவர்களின் தைரியமும் உற்சாகமும் நம் அனைவருக்கும் எழுச்சியூட்டும்.”