தமிழ் சினிமாவில் ‘குரூப்பிசம்’ இருக்கு… யாருங்க நீங்க? நட்டி நட்ராஜ் ஆவேசம்!

0
698

தமிழ் சினிமாவில் ‘குரூப்பிசம்’ இருக்கு… யாருங்க நீங்க? நட்டி நட்ராஜ் ஆவேசம்!

தமிழ் சினிமாவில் குரூபிசம் இருப்பதாக நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஹிந்தி திரைப்பட உலகில் வாரிசுகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் வாரிசுகளுக்கு மட்டுமே வாய்ப்புகள் வழங்கப்படுவதாகும் புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் பாலிவுட்டில் திரைமறைவில் நடைபெற்று வரும் வாரிசு அரசியலை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் ஹிந்தி திரைப்படங்களில் தான் பணியாற்றக் கூடாது என ஒரு கூட்டம் உழைத்து வருவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு ஆதரவாக பலரும் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், பாலிவுட் இயக்குநரான சேகர் கபூர், ரஹ்மானுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். பாலிவுட் திரையுலகம் தொடமுடியாத உயரத்தை ஆஸ்கர் விருதின் மூலம் ஏ.ஆர்.ரஹ்மான் அடைந்ததே அவரை புறக்கணிக்கக் காரணம் என சேகர் கபூர் கூறியிருந்தார்.

இதையடுத்து ஸ்லம்டாக் மில்லியனர் படத்தின் சிறந்த இசைக்கலவைக்காக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் இந்தி திரையுலகம் தன்னை புறக்கணிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆஸ்கர் விருது வென்ற பின்னர் இந்தியில் பட வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், தன்னை தேவையில்லை என்று இந்தி பட தயாரிப்பு நிறுவனங்கள் கூறி வருவதாகவும் ரசூல் பூக்குட்டி வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ரசூல் பூக்குட்டி இதுகுறித்த தனது சமூகவலைதள பதிவில், பாலிவுட் திரையுலகுக்குள் தன்னால் எளிதில் நுழைந்துவிட முடியும் என்ற போதிலும், அங்கு செல்ல மாட்டேன் என்றும் இந்திய திரையுலகம் தான் தனக்கு ஆஸ்கர் விருது பெற்றுத் தந்ததாகவும் டிவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் லவ் ஆஜ் கல், ப்ளாக் பிரைடே உள்ளிட்ட பல பாலிவுட் படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சதுரங்க வேட்டை நாயகன் நட்டி நட்ராஜ், “தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு… யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க… யாருங்க நீங்க?” என்று டிவிட்டரில் ஆவேசமாக பதிவிட்டுள்ளார்.