தமிழக சட்டசபை தேர்தல் 2021: கோவையை நம்பர் 1 ஆக மாற்றுவேன் : கமல்ஹாசன்

0
875

தமிழக சட்டசபை தேர்தல் 2021: கோவையை நம்பர் 1 ஆக மாற்றுவேன் : கமல்ஹாசன்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதற்கிடையில், கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் மநீம கட்சியின் சார்பாக போட்டியிடுகிறார், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இத்தொகுதியில் பிரச்சாரத்தில் பேசும்போது “ கோவையை நம்பர் 1 ஆக மாற்றுவேன்” என்று தெரிவித்தார்.

மேலும் காமராஜர் புரம் பகுதியில் இன்று பரப்புரையில் ஈடுபட்டிருந்தார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் கோயம்புத்தூர் தெற்குப் பகுதியின் வேட்பாளருமான கமல்ஹாசன், இப்பகுதியில் வாழும் மக்களுடன் ஏற்கனவே இணையவழி உரையாடல் நிகழ்த்தி இருந்தார். அந்த ஸூம் (zoom) உரையாடலின் போது நான் கர்ப்பிணி, என்னைப் பார்க்க வருவீர்களா என்று கேட்ட ரம்யாவை இன்று சந்தித்தார். அவர் விரும்பியபடியே டைரியில் கையொப்பமிட்டார் கமல்ஹாசன்.

தனது மகன் கொலை செய்யப்பட்ட வழக்கிற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ஸூம் (zoom) சந்திப்பில் கோரிக்கை விடுத்திருந்த லலிதாவை சந்தித்தார்.

பார்வைத்திறன் குறைபாடு கொண்ட சிறுவன் கமலேஷூம் கமல்ஹாசனைச் சந்திக்க விருப்பம் தெரிவித்தார். அவரையும் வரவழைத்து நலம் விசாரித்தார் கமல்.

கடந்த வாரம் ஸூம் (zoom) மீட்டிங்கில் சந்தித்துப் பேசியவர்களை மறக்காமல் பெயர் சொல்லி அழைத்ததைக் கேட்டு கூட்டம் ஆர்ப்பரித்தது.
அப்போது திரண்டிருந்த காமராஜர் புரம் மக்கள் கமல்ஹாசனை தெலுங்கில் பேசும்படி கோரிக்கை விடுக்க தெலுங்கில் சரளமாகப் பேசினார்.