தனக்கு முடி திருத்திய பார்பருக்கு சொந்தக் கடை அமைக்க உதவிய ம.பி., அமைச்சர்

0
235

தனக்கு முடி திருத்திய பார்பருக்கு சொந்தக் கடை அமைக்க உதவிய ம.பி., அமைச்சர்

போபால்: தனக்கு முடி திருத்திய பார்பருக்கு சொந்தமாக கடை வைக்க பண உதவி செய்துள்ளார் ம.பி., அமைச்சர் விஜய் ஷா.

ம.பி., கந்த்வா மாவட்டத்தில் குலைமால் என்ற நகரைச் சேர்ந்த பார்பர் ரோஹிதாஸ் என்பவர், குமைாலில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வந்த அமைச்சரிடம் சொந்தமாக கடை நடத்த பண உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து ரோஹிதாஸின் திறமையை சோதிக்க நினைத்த அமைச்சர் ஷா தனக்கு முடி திருத்தியும் ஷேவ் பண்ணவும் கேட்டுக் கொண்டார். ரோஹிதாஸ் மாஸ்க் அணிந்து கொண்டு மேடையிலேயே அமைச்சருக்கு முடிதிருத்தவும் ஷேவிங்கும் செய்தார். இதனால் திருப்தி அடைந்த அமைச்சர் ரோஹிதாஸுக்கு அந்த இடத்திலேயே ரூ 60,000 /- கொடுத்து உதவினார். இதை சற்றும் எதிர்பாராத ரோஹிதாஸ் மகிழ்ச்சி அடைந்தார்.

மேலும் அமைச்சர் விஜய் ஷா கூறியதாவது,‛ சொந்தமாக தொழில் துவங்க நினைக்கும் இளைஞர்களுக்கு அரசு உதவ தயாராக உள்ளது. அவர்கள் முதலை மட்டும் திருப்பி செலுத்தினால் போதும் வட்டியை மாநில அரசு கட்டி விடும்’ இவ்வாறு அவர் தெரிவித்தார்.