செமஸ்டர் ரத்து… அரியர்ஸ் பாடங்கள் எப்போ எழுதனும்…?

0
385

செமஸ்டர் ரத்து… அரியர்ஸ் பாடங்கள் எப்போ எழுதனும்…?

செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் கல்லூரி திறந்த பின்னர் மாணவர்கள் அரியர் பாடங்களுக்கு தேர்வு எழுத வேண்டும் என உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கொரோனா பாதிப்பு காரணமாக கலை அறிவியல் கல்லூரி முதுகலை படிப்புகள், பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான இறுதியாண்டு தேர்வுகளை தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில், முதலாமாண்டு மற்றும் 2, 3-ம் ஆண்டு மாணவர்கள் வைத்துள்ள அரியர் ரத்து செய்யப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து உயர் கல்வித்துறை வட்டாரத்தில் கேட்கும் போது, நடப்பு செம்ஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் அரியர்ஸ் தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை என்றும், மாணவர்கள் தங்களது அரியர்ஸ் பேப்பர்களை, கல்லூரி திறக்கும் போது தேர்வு நடத்தப்பட்டு எழுத வைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

அரியர்ஸ் அல்லாத நடப்பு செமஸ்டர் பாடங்களுக்கு எப்படி மதிப்பெண் அளிப்பது என்பது தொடர்பாக ஆலோசனை நடந்துவருகிறது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

மேலும் இறுதியாண்டு தேர்வினை பொருத்தவரை ஏற்கனவே தேர்வு விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை மாநில அரசிடம் வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அதற்கு உரிய அனுமதியை மத்திய அரசு அளித்து விட்டால் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் விவகாரத்திலும் தமிழக அரசு உரிய முடிவை எடுக்கும் என்றும் உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.