சென்னை விமான நிலையத்தின் புதிய இயக்குநராக சி.வி. தீபக் பதவியேற்றார்
சென்னை,
திரு சி.வி. தீபக் 27.05.2023 அன்று இந்திய விமான நிலைய ஆணையத்தின் சென்னை விமான நிலைய இயக்குநராக பொறுப்பேற்றார். அவர் சென்னை விமான நிலையத்தில் விமான நிலைய இயக்குநராக திரு எஸ்.எஸ்.ராஜுவிடம் இருந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இதுவரை, புதுதில்லியில் உள்ள கார்ப்பரேட் தலைமையகத்தின் (நிதி மற்றும் கணக்குகள்) வரிவிதிப்பு பிரிவு பொது மேலாளராக திரு. சி.வி. தீபக் பதவி வகித்தார்.
இதற்கு முன்பு, 2015 ஜூன் முதல் 2021 ஜனவரி வரை சென்னை விமான நிலையத்தில் பொது மேலாளராக (நிதி மற்றும் கணக்குகள்) பணியாற்றியுள்ளார்.