சீனாவில் கோலாகலமாக நடைபெறும் சர்வதேச டிராகன் படகுப் திருவிழா! விழாக்கோலம் பூணும் மக்காவோ நகரம்..!!

0
111

சீனாவில் கோலாகலமாக நடைபெறும் சர்வதேச டிராகன் படகுப் திருவிழா! விழாக்கோலம் பூணும் மக்காவோ நகரம்..!!

மக்காவோ: சீனாவில் வரும் 22ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ள சர்வதேச டிராகன் படகுப் திருவிழாவை காண அந்நாட்டு மக்கள் தயாராகி வருகின்றனர். சீன நாள் காட்டியின் 5வது மாதத்தில் 5வது நாளில் நடைபெறக்கூடிய சர்வதேச டிராகன் படகுப் திருவிழா, உலக அளவில் பிரசித்திபெற்றது. இந்த படகுத் திருவிழாவை ஒட்டி நடத்தப்படும் டிராகன் படகு போட்டியில் இந்த வரும் 138 அணிகள் பங்கேற்கவுள்ளன. சிறிய ரகம், நடுத்தர ரகம், ஸ்டாண்டட் ரகம் என 3 பெரும் பிரிவுகளாக படகு போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டிகளை கண்டு ரசிக்க சீனர்கள் மட்டுமின்றி ரஷ்யா, மலேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்களும் வருகை தரவுள்ளனர். இந்த படகுத் திருவிழாவை முன்னிட்டு சில மாதங்களுக்கு முன்பு இருந்தே பல்வேறு மாகாணங்களில் இருந்தும் ஆண்கள், பெண்கள், மாணவர்கள், கலப்பு குழுக்கள் என அனைத்து பிரிவுக்குமான படகு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு படகு திருவிழாவை ஒட்டி சீன ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள இசையுடன் கூடிய காணொலி துணுக்கு, ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.