சன் குடும்பம் சார்பில் கோடி கணக்கில் நிதி வழங்கிய கலாநிதி மாறன் – எவ்வளவு தெரியுமா!

0
246

சன் குடும்பம் சார்பில் கோடி கணக்கில் நிதி வழங்கிய கலாநிதி மாறன் – எவ்வளவு தெரியுமா!

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சைக்காக, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நிதி திரட்டும் முயற்சியை சில தினங்களுக்கு முன் தொடங்கினார். இதுதொடர்பான அறிக்கையில், “கொரோனா தொற்றின் இரண்டாவது அலையால் நமது மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு சிரமப்பட்டுவரும் நிலையில் இந்தப் பேரிடரை எதிர்கொள்வதற்கு நமது அரசு கூடுதலான நிதி ஆதாரங்களைச் செலவிட வேண்டிய தேவையும் உள்ளது.

எனவே, அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவி செய்ய வேண்டியது அவசியம். அதனால், பொதுமக்களும் நிறுவனங்களும் தாராளமாக நன்கொடை வழங்குமாறு” வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து தமிழ் திரையுலகை சேர்ந்த நட்சத்திரங்கள் பலரும், பிரபலங்கள், தொழிலதிபர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தங்களது உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது சன் நிறுவனத்தின் சார்பில் கலாநிதி மாறன் ரூ.10 கோடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

இதே போல, நடிகர் ரஜினிகாந்த் தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.50 லட்சம் கொடுத்துள்ளார். தேர்தலுக்குப் பிறகு, ரஜினி – ஸ்டாலின் முதன்முறையாக நேரில் இப்போதுதான் சந்திக்கின்றனர்.

முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் ரஜினியின் மகளும் இயக்குநருமான செளந்தர்யா ரஜினிகாந்த், தனது கணவர் விசாகன் மற்றும் குடும்பத்தினருடன் சென்று மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து ரூ.50 லட்சம் ரூபாய் நிவாரண நிதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரபல திரைப்பட நடிகர் விக்ரம் கொரொன தடுப்பு பணிகளுக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு RTGS மூலமாக 30 லட்சம் ரூபாய் வழங்கினார்.