கொரோனா பரிசோதனை: முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாதிப்பு இல்லை

0
282

கொரோனா பரிசோதனை:

முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பாதிப்பு இல்லை

சென்னை: சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

சுகாதாரத்துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்துக்கு சென்று அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தினார்கள்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தார். சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு சென்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.

கொரோனா பரிசோதனையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கு கொரோனா பாதிப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.