குழந்தைகள் சொல்ல வரும் விஷயங்களை பெற்றோர் கவனத்துடன் கேட்க வேண்டும்; அன்பில் மகேஸ்

0
143

குழந்தைகள் சொல்ல வரும் விஷயங்களை பெற்றோர் கவனத்துடன் கேட்க வேண்டும்; அன்பில் மகேஸ்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், அரசு உதவிபெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற அவர், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய 8 வயது சிறுமியை துணிச்சலுடன் காப்பாற்றிய 9 வயது சிறுவன் லோஹித்திற்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில்மகேஸ், குழந்தைகளுடன் பெற்றோர் நட்புடன் பழகி, அவர்களது மனநிலையை அறிந்திட வேண்டும், என்றும் குழந்தைகள் சொல்ல வரும் விஷயங்களை பெற்றோர் கவனத்துடன் கேட்க வேண்டும் என என்றார்.