கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக சி.ஜி.கர்ஹட்கர் பொறுப்பேற்றார்

0
169

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக சி.ஜி.கர்ஹட்கர் பொறுப்பேற்றார்

கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக திரு சி ஜி கர்ஹட்கர் இன்று பதவியேற்றார். இதற்கு முன் இந்த பொறுப்பிலிருந்த புகழ் பெற்ற விஞ்ஞானி முனைவர் பி வெங்கட்ராமன்  இன்று பணி நிறைவுப் பெற்றதையடுத்து திரு கர்ஹட்கர் புதிய இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

இவர் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் அணு உலைக் குழுமத்தில் புகழ்பெற்ற விஞ்ஞானி மற்றும் இயக்குநராக உள்ளார். இவர் 1987-ம் ஆண்டு இயந்திரப் பொறியாளர் இளநிலைப் பட்டப்படிப்பை முடித்தார். மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையப் பயிற்சிப் பள்ளியிலும் பட்டம் பெற்றார். 1988-ம் ஆண்டு இம்மையத்தின் அணு உலை செயல்பாட்டுப் பிரிவில் பணியில் சேர்ந்தார். கடந்த 36 ஆண்டுகளில் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றியுள்ளார்.

பாபா அணு ஆராய்ச்சி உலை குழுமத்தின் இயக்குநரான இவர், அணு உலைகளின் பாதுகாப்பான மற்றும் திறமையான இயக்கம், பயன்பாடு, அணு உலை நீக்கம், புதிய அணு உலைகளுக்கான திட்டமிடல் ஆகியவற்றின் ஒட்டுமொத்தப் பொறுப்பாளராக செயல்பட்டார். துருவா அணு உலையின் எரிபொருள் செயல் திறனை மேம்படுத்துவதில் அதிக அளவு பங்களிப்பு செய்துள்ளார். தொடர்டைய பொருட்களை மேம்படுத்துவதற்காக தேசிய விற்பனையாளர்களுடன் கலந்துரையாடுவது, உற்பத்தி முறையை ஆராய்ந்து மேம்படுத்துவது, இறுதியாக துருவா அணு உலை நீடித்த வகையில் முழு ஆற்றலுடன் இயங்குவதற்கு மிகவும் பொறுப்பாக இருந்தார். இவர் பல்வேறு பாதுகாப்பு மேம்படுத்துதலுக்கு வழிகாட்டி செயல்படுத்தியுள்ளார். ஆராய்ச்சி அணு உலைகளின் தற்போதைய பாதுகாப்புத் தர நிலைகளை மேம்படுத்துதல் மற்றும் அணு உலைகளுக்கான இருப்பு மற்றும் திறன் காரணிகளை சமரசம் செய்யாமல் 2018-ம் ஆண்டில் நீண்ட காலமாக நிறுவுவதற்கு தேவையான சில பழுதுபார்ப்புகளை புதுமையான முறையில் அணு உலை கருவை இறக்காமல் செய்ததன் மூலம் வருடம் முழுவதும் அணு உலை செயலிழப்பு தவிர்க்கப்பட்டது.

இவரது கவனமான திட்டமிடல் மற்றும் தலைமைத்துவம் காரணமாக 75 நாட்கள் கால அவகாசம் இருந்த போதும் 10 நாட்கள் முன்பாகவே பணி முடிக்கப்பட்டது. இதன் காரணமாக ஓரகத் தனிமங்களின் விநியோகம் விரைவாக மீண்டும் தொடங்கப்பட்டது. 123 புரிந்துணர்வு காரணமாக சைரஸ் அணு உலை, 2010 டிசம்பர் மாதம் நிறுத்தப்பட்டது. இதற்குப் பின் மருத்துவத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக விரைவாக அணு உலையில் நிறைய பொறியியல் மாற்றங்களை செய்து தொழில் துறையில் ஆராய்ச்சி அணு உலைகளின் பயன்பாட்டுத் திட்டங்களைத் துவக்கினார்.

அவரது தலைமையின் கீழ் கதிர்வீச்சின் விளைவு மற்றும் நிதி ஒதுக்கீட்டின் சமநிலையை வைத்து நாட்டிலேயே முதல் முறையாக சைரஸ் போன்ற பெரிய அணு உலைக்கானத் திட்டம் தயாரிக்கப்பட்டது. பொருட்களின் கதிர்வீச்சு பண்புகளுக்கான தரவுத்தளத்தை உருவாக்குவதற்கு சைரஸ் அணு உலையிலிருந்து தரவுச் செயலாக்கத்திற்கான ஒரு செயல்முறையை நிறுவுவதில் இவர் முக்கியப் பங்கு வகித்தார். புதிய அணு உலைகளை வடிவமைக்கவும் மற்ற இயக்கத்தில் உள்ள அணு உலைகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும்.

பழைய அப்சரா அணு உலை சர்வதேச உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக 2009-ல் மூடப்பட்டது. அப்சரா-யு, 2 மெகாவாட் அணு உலை இவரது தலைமையின் கீழ் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது. பழைய அப்சரா அணு உலையை அருங்காட்சியகமாக மாற்ற வாய்ப்புள்ளது. அணுசக்தித் துறையின் சாதனைகள் மற்றும் வரலாற்றை முன்னிலைப்படுத்தும் பல காட்சிக் கூடங்களை நிறுவ அரும்பணியாற்றியுள்ளார். இந்தக் கண் காட்சி மையம் விழிப்புணர்வுக்கு ஒரு முக்கியமான இடமாக இருக்கும். கொவிட்-19-ன் போது பயணக் கட்டுபாடுகள் காரணமாக அலுவலகத்திற்குச் செல்ல முடியாத பணியாளர்களுக்குப் பதிலாக துருவா அணுஉலை 24 மணி நேரமும் அதிகாரிகள் உதவியுடன் இயக்கப்படுவதை உறுதி செய்தார். இதன் மூலம் ஓரகத் தனிமங்கள் விநியோகம் தடையின்றி கிடைத்தது.

திரு கர்ஹட்கர், பல நிர்வாக, நிதி, தொழில்நுட்ப மற்றும் ஒழுங்குமுறை குழுக்களுக்கு தலைமை வகித்துள்ளார். கொள்முதல் நடைமுறைகளை சீர்திருத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றினார், கொள்முதல் நடைமுறைகளை எளிதாக்கியதால் பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் திட்டங்கள் விரைவாக செயல்படுகிறது. இம்மையத்தின் பல உத்திக் குழுக்களின் உறுப்பினராக உள்ளார்.