கந்தகோட்டத்தில் நடைப்பெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் முருகரின் வேலோடு வீரபாகுவாக ஆதேஷ் பாலா

0
128

கந்தகோட்டத்தில் நடைப்பெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியில் முருகரின் வேலோடு வீரபாகுவாக ஆதேஷ் பாலா

சூரசம்ஹார கதை சுறுக்கமாக…

கஷ்யபமுனிவருக்கும் மாயைக்கும் பிறந்த பிள்ளைகள் சூரபத்மன், சிங்கமுகன் தாரகன். இவர்களுக்கு ஆயிரம் தலைகள் இரண்டாயிரம் கைகள் உண்டு. இதில் சூரபத்மனுக்கு அசுரமுகம், தாரகனுக்கு யானைமுகம், சிங்கமுகனுக்கு சிங்கமுகம். இவர்கள் தங்களின் குருவான சுக்கிராச்சாரியாரிடம் உபதேசம் பெற்று சிவனை நோக்கி தவம் பெற்று ப்ரபஞ்சத்தை ஆட்சி செய்யும் வரம் பெற்று தேவர்கள், இந்திரன் போன்றோரை துன்பப்படுத்தி வந்தனர்.

அரக்கர்கள் மூவரின் கொடுமைத்தாங்காது, தேவர்கள் சிவனிடம் சென்று முறையிட்டனர். சிவபெருமான் ஆறுமுகத்தை கொண்ட முருகனை படைத்து அவரின் மூலம் அரக்கர்களை அழித்தார். இந்த நிகழ்வை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சூரசம்ஹார நிகழ்வானது அனைத்து முருகன் ஆலயங்களிலும் கந்தசஷ்டி விழாவாக வெகுவிமர்சையாக நடைபெறும்.

அந்தவகையில், இந்த ஆண்டு முருகப்பெருமானைக் கொண்டாடும் கந்த சஷ்டி விழாவில் புகழ்பெற்ற முருகன் கோவில்களில் கொண்டாடப்பட்டது.

இதில் சென்னை கந்தகோட்டத்தில் சூரசம்ஹார நிகழ்வு நடைப்பெற்றது.

7.11.2024 அன்று சென்னை கந்தகோட்டத்தில் சூரசம்ஹாரம் நாடகம் வடிவில் பல ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

கிபி 1866 ஆம் ஆண்டு முதல் இன்று வரை திரு கே.பி.ஆறுமுக செட்டியார் வம்ச வகையறாக்கள் இந்த கந்தக்கோட்ட சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
ஹெரான் ராமசாமி குழுவினர் 1986 ஆம் ஆண்டு முதல் 39 வருடமாக சிறப்பாக திரை கலைஞர்கள் நடிக்க சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். இதில் வீரபாகுவாக பேட்ட, முண்டாசுபட்டி, அந்தகன், பிதா திரைப்புகழ் நடிகர் ஆதேஷ் பாலா, சூரபத்மனாக சண்முகம், கலாதர் நடித்தனர். ஹெரான் முரளிதரன் சூரசம்ஹார கதையை தொகுத்து வழங்கினார்.