ஓன்றரைகோடி மதிப்பிலான 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் படுக்கை வசதிகள் கொண்ட சத்யலோக் இலவச டயாலிசிஸ் மையத்தை  தமிழக சுகாதாரத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன், ராஜீவ் சம்பத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

0
83

ஓன்றரைகோடி மதிப்பிலான 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் படுக்கை வசதிகள் கொண்ட சத்யலோக் இலவச டயாலிசிஸ் மையத்தை  தமிழக சுகாதாரத்துறை  செயலாளர் ராதாகிருஷ்ணன், ராஜீவ் சம்பத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

சென்னை ரோட்டரி கிளப் சார்பாக சத்யலோக் டயாலிசிஸ் மையம் போரூரில் உள்ள சத்யலோக் அறக்கட்டளை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், ரோட்டரி கிளப் மாவட்ட ஆளுநர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர் இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் மற்றும் முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை ரோட்டரி கிளப்பின்  சார்பாக பள்ளிகள், மருத்துவமனைகள் உட்பட பல நீண்ட கால மற்றும் குறுகிய கால திட்டங்களைக்  செயல்படுத்தி வருகின்றனர்.

மேலும் சென்னை கோவிட் நிவாரணம், வெள்ள நிவாரணம் போன்ற மகத்தான பணிகளை செய்துள்ளனர். சிறுநீரக பாதிப்படைந்த நபர்களுக்கு உதவும் விதமாக இந்த ஆண்டு  ரோட்டரி கிளப் தலைவர் ராஜீவ் சம்பத் அவர்கள் சத்யலோக் அறக்கட்டளைக்கு ஓன்றரைகோடி மதிப்பிலான Fresenius ஜெர்மன் தொழில்நுட்பம் நிறைந்த 10 டயாலிசிஸ் இயந்திரங்கள் மற்றும் படுக்கை வசதிகளை வழங்கியுள்ளார்.

இதனை சத்யலோக்  அறக்கட்டளை  மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை கேப்பிட்டல் மூலமாக டயாலிசிஸ்  மையத்தின்  மூலமாக போரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 18000 பேருக்கு இலவச அல்லது மானியத்துடன் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப் போகிறது.  பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்பெறும் பார்வை மையங்கள், புற்றுநோய் மருத்துவமனைகள் பள்ளிகள் மற்றும் அனாதை இல்லங்கள் போன்ற பல்வேறு திட்டங்களுக்கு கிளப் மூலம் இந்த ஆண்டு 2.5 கோடி நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது என  ரோட்டரி கிளப் தலைவர் ராஜீவ் சம்பத் தெரிவித்தார்.