ஐரோப்பாவின் முதல் டெஸ்லா தொழிற்சாலை; தொடக்க விழாவில் நடனமாடி அசத்திய எலான் மஸ்க்- வைரல் வீடியோ

0
147

ஐரோப்பாவின் முதல் டெஸ்லா தொழிற்சாலை; தொடக்க விழாவில் நடனமாடி அசத்திய எலான் மஸ்க்- வைரல் வீடியோ

பெர்லின், உலகின் முன்னணி எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. உலக பணக்காரர்களின் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்லா நிறுவனம் தனது தொழிற்சாலையை உலகெங்கும் கொண்டு செல்லும் முயற்ச்சியில் ஈடுபட்டு வந்தது.

கொரோனா தொற்று பரவல் காரணத்தால் இந்த பணி தாமதமாகி கொண்டே சென்றது. இந்த நிலையில் தற்போது டெஸ்லா நிறுவனம் ஐரோப்பாவில் முதல் தொழிற்சாலையை ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின்-க்கு அருகில் நேற்று அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது.

டெஸ்லா தனது உற்பத்தியை அதிகரிக்கச் சீனாவில் ஜிகாபேக்ட்ரியை ஏற்கனவே உருவாக்கி இருந்த நிலையில் தற்போது ஆட்டோமொபைல் துறைக்குப் பெயர் போன ஐரோப்பிய சந்தையில் தனது நிறுவனத்தை துவக்கியுள்ளது.

இதன் துவக்க விழாவில் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ஷாங்காங் தொழிற்சாலை திறப்பு விழாவில் நடனம் ஆடியதை போலவே நேற்று பெர்லின் தொழிற்சாலையின் திறப்பு விழாவிலும் நடனம் ஆடி அசத்தியுள்ளார்.

எலான் மஸ்க் நடனமாடும் வீடியோவை டெஸ்லா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளைங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.