உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய,தமிழகத்தை சேர்ந்தஇளம் கிராண்ட் மாஸ்டருக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

0
84

உலக சாம்பியன் கார்ல்சனை வீழ்த்திய,தமிழகத்தை சேர்ந்தஇளம் கிராண்ட் மாஸ்டருக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார்.

ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டி, ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. 16 வீரர்கள் இதில் பங்கேற்றனர். எட்டாவது சுற்றில் சென்னையைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா, உலகச் சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார். கருப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா, 39-ஆவது நகர்த்தலின்போது வெற்றியை வசமாக்கினார்.

இந்நிலையில் உலகச் சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு முதல்- அமைச்சர் மு,க,ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்

அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ;

உலகின் சிறந்த செஸ் ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது பிரக்ஞானந்தாக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும் என தெரிவித்துள்ளார்.