இளைஞர்கள் பெரிதாக கனவு கண்டு, உயர்ந்த இலக்கை நிர்ணயிக்க வேண்டும்: பியுஷ் கோயல்

0
164

இளைஞர்கள் பெரிதாக கனவு கண்டு, உயர்ந்த இலக்கை நிர்ணயிக்க வேண்டும்: பியுஷ் கோயல்

புதுதில்லி, இளைஞர்கள் பெரிதாக கனவு கண்டு உயர்ந்த இலக்கை நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, ஜவுளி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் இன்று அறிவுறுத்தினார்.
பத்து நாள் நல்லாட்சி சுற்றுப்பயணமான ‘இன்டெர்ன் நேஷன் லீடர்ஷிப் டூர் 2022’-ஐ மேற்கொண்டுள்ள வதோதராவைச் சேர்ந்த ‘சத்ர சன்சாத்’ நிறுவனத்துடன் இணைந்துள்ள பல்கலைக்கழக மாணவர்களிடம் உரையாற்றிய திரு கோயல், இளைஞர்கள் நேர்மறையான மாற்றத்தின் முகவர்கள் என்று கூறினார்.
சுதந்திர இயக்கம் மற்றும் அவசரநிலைக்கு எதிரான போராட்டத்தில் அவர்களின் பங்கை மேற்கோள் காட்டிய திரு. கோயல், “வெகுஜன இயக்கங்கள் சமகால இளைஞர்களின் பின்னணியில் உருவாக்கப்பட்டன”, என்றார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசத்தின் இளைஞர்களுக்கு ஒரு உத்வேகமான தலைவர் என்றும், “அனைவரின் முயற்சியுடன்” என்ற முழக்கத்துடன் அனைத்து மக்களையும் ஈடுபடுத்துவதன் மூலம் இந்திய வரலாற்றில் ‘தூய்மை இந்தியா’ மற்றும் ‘தற்சார்பு இந்தியா’ போன்ற பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தவர் என்றும், திரு. கோயல் கூறினார்.