இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கைது

0
311

இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கைது

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் இந்தி கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே. கடந்த செப்டம்பர் 10-ந் தேதி இவருக்கும் – சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றது.

திருமண புகைப்படங்களை வெளியிட்டு ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்றெல்லாம் காதலர் குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார். திருமணம் முடிந்த கையோடு பூனம் பாண்டே தன் கணவருடன் கோவாவுக்கு சென்றார்.

கோவாவுக்கு சென்ற இடத்தில் சாம் பாம்பே தன்னை பலாத்காரம் செய்ததுடன், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக பூனம் பாண்டே போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். பின்னர் சில தினங்களில் இருவரும் சமாதானம் ஆகிக்கொண்டனர்.

இந்நிலையில், தற்போதும் தனது கணவர் சாம் பாம்பே உடன் கோவாவில் உள்ள பூனம் பாண்டே நேற்று முன்தினம் ஷப்போலி அணைக்கட்டு அருகில் நின்று ஆடைகளை ஒவ்வொன்றாக களைந்து நிர்வாணமாக போஸ் கொடுத்து வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அரசுக்கு சொந்தமான இடத்தில் ஆபாச படம் எடுத்த பூனம் பாண்டே மீதும் அவருக்கு அனுமதி அளித்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோவா முன்னேற்ற கழக மகளிர் அணியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதனால் பூனம் பாண்டே கைதாகலாம் என பரபரப்பு
ஏற்பட்டது.

இந்த நிலையில் கோவா கடற்கரையில் ஆபாசமான வீடியோ எடுத்ததற்காக சர்ச்சைக்குரிய மாடல்-நடிகை பூனம் பாண்டேவை போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.