இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிகம் அறியப்படாத வீர்ர்களை துணைக் குடியரசுத் தலைவர் நினைவு கூர்ந்தார்

0
391

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிகம் அறியப்படாத வீர்ர்களை துணைக் குடியரசுத் தலைவர் நினைவு கூர்ந்தார்

இன்று 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிகம் அறியப்படாத வீரர்களுக்கு துணைக் குடியரசுத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு அஞ்சலி செலுத்தினார். ஒரு பேஸ்புக் பதிவில், திரு. நாயுடு, நமது தேசிய சின்னங்களைக் கொண்டாடுவது இயல்பானது என்றாலும், அந்தந்தப் பிராந்தியங்களில் மிகவும் பிரபலமாக இருந்த பல வீர்ர்களின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது, மேலும் இத்தகைய அதிகம் அறியப்படாத, எண்ணற்ற வீர்ர்களின் வீர செயல்கள் தான் பிரிட்டிஷாரிடம் நடுக்கத்தை உண்டாக்கியது.

அவர்களை வெறும் பிராந்திய சின்னங்களாகக் கருதக்கூடாது, அவர்களின் தைரியம் மற்றும் தியாகத்தின் செயல்கள் நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தெரிந்திருக்க வேண்டிய ‘தேசிய வீர்ர்களாகக் கருதப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தேசம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும், அவர்களின் தன்னலமற்ற முயற்சிகளின் பலனால் கிட்டிய சுதந்திரம் என்னும் பழத்தின் மூலம் தான், இறையாண்மை மற்றும் துடிப்பான பாராளுமன்ற ஜனநாயகத்தை குடிமக்களாக நாம் அனுபவிக்கிறோம்.

இந்த அறியப்படாத வீர்ர்கள் ஆற்றிய முக்கிய பங்கு குறித்து மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக முக்கியமானது என்று துணைக் குடியரசுத் தலைவர் கூறினார். அந்தந்த மாநிலங்கள் அவர்களின் வீரம் மற்றும் தியாகங்களின் கதைகளை வரலாற்று உரை புத்தகங்களில் வெளியிட வேண்டும் என்றும் அவர்களின் பாரம்பரியத்தை உயிரோடு வைத்திருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். ‘அப்போதுதான் நாம் அவர்களுக்கு நீதி வழங்கியவர் ஆவோம், அவர்களின் கனவுகளின் இந்தியாவை உருவாக்குவோம் – உண்மையான சுயசார்பு பாரதம், உன்னத பாரதம் மற்றும் வலுவான பாரதம்’ என்று தெரிவித்தார்.

ALSO READ:

Vice President remembers the unsung heroes of India’s struggle for independence

திரு. நாயுடு தனது பேஸ்புக் பதிவில், அதிகம் அறியப்படாத அந்த வீர்ர்கள் செய்த பங்களிப்புகளை நினைவு கூர்ந்தார்; அல்லூரி சீதாராம ராஜு, சின்னசாமி சுப்பிரமணிய பாரதியார், மாதாங்கினி ஹஸ்ரா, பேகம் ஹஸ்ரத் மஹால், பாண்டுரங் மகாதேவ் பாபாட், பொட்டி ஸ்ரீராமுலு, அருணா ஆசாஃப் அலி, கரிமெல்லா சத்தியநாராயணா, லட்சுமி சேகல், பிர்சா முண்டா, பர்பதி கிரி, டிரோட் சிங், கனக்லதா பாருவா, கண்ணேகந்தி ஹனுமந்து, ஷாஹீத் குதிராம் போஸ், வேலு நாச்சியார், கிட்டூர் சென்னம்மா, வீரபாண்டியா கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, சூர்யா சென், அஷ்பாகுல்லா கான், பத்துகேஸ்வர் தத், பிங்காலி வெங்கய்யா, துர்காபாய் தேஷ்முக், ஸ்ரீ அரவிந்தோ கோஷ் மற்றும் மேடம் பிகாஜி காமா ஆகியோர் அடங்குவர்.

இந்தியா தனது கடந்த கால மகிமையை மீண்டும் பெற்று, புதுப்பிக்கப்பட்ட உறுதியுடனும், 130 கோடி மக்களின் மகத்தான ஆற்றலுடனும் ஒரு சிறந்த நாடாளுமன்ற ஜனநாயகமாக மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தின் சில மைல்கற்களை எடுத்துரைத்து, திரு. நாயுடு, கடந்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா அதன் உள்கட்டமைப்பை விரைவாக மேம்படுத்தி, அதன் சமூகப் பாதுகாப்பு வலையைக் கணிசமாக வலுப்படுத்தியுள்ளது என்றார். இந்தியாவில் இப்போது மின்மயமாக்கப்படாத கிராமங்கள் பூஜ்ஜியமாக உள்ளன, மேலும் அவை திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேசம் இதுவரை செய்துள்ள முன்னேற்றத்தை மனதில் கொண்டு, துணைக் குடியரசுத் தலைவர் ஒரு புறநிலை உள்நோக்கத்திற்கு அழைப்பு விடுத்து, இந்த முக்கியமான கட்டத்தில், 2022க்குள் ஒரு தேசமாக நாம் எதை அடைய விரும்புகிறோம் என்று நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

பிரதம மந்திரி, திரு நரேந்திர மோடியின் ”உறுதியுடன் விருப்பத்தை நிறைவேற்றுதல்’ அழைப்பு, நாம் நினைக்கும் விதத்திலும், நடந்துகொள்ளும் விதத்திலும், 2022-23 வாக்கில் ஒரு புதிய இந்தியாவில் நாம் செயல்படும் விதத்திலும் ஒரு தீவிரமான மாற்றத்திற்கான தெளிவான அழைப்பு என்று துணைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டார்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடையும் 2022ஆம் ஆண்டிற்கான தனது பார்வையை கோடிட்டுக் காட்டிய திரு. நாயுடு, 2022க்குள் இந்தியாவில் வீடற்ற நபர்கள் இருக்கக்கூடாது என்று கூறினார். ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரமான சுற்றுச்சூழல், சுத்தமான உணவு மற்றும் குடிநீர் மற்றும் நல்ல சுகாதார வசதிகள் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். வேளாண் துறையில் ஒரு மாற்றத்தின் அவசியத்தை குறிப்பிடுகையில், 2022க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நாம் பாடுபட வேண்டும் என்றார்.

ஜனநாயகத்தின் பலனை உணர்ந்து கொள்வதற்கு, இளைஞர்களின் திறன் தொகுப்புகளை மேம்படுத்துவதில் புதிய கவனம் செலுத்த வேண்டும் என்று திரு. நாயுடு அழைப்பு விடுத்தார். வறுமையை ஒழிப்பதற்கும், சமூக மற்றும் பாலினப் பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் ஊழலை ஒழிப்பதற்கும் நாம் புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடனும் உறுதியுடனும் பணியாற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.

“நமது மக்கள்தொகையில் மாற்றுத்திறனாளிகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் திருநங்கைகள் ஒடுக்கப்பட்ட பிரிவினருக்கு, ஒரு வளமான, வெகுமதியான மற்றும் அமைதியான வாழ்க்கையை அளித்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.

அந்தியோதயாவும், சர்வோதயாவும் நமது முன்னோக்கிய பயணத்தின் முக்கிய கொள்கைகளாகச் செயல்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார், மேலும் 2022ஆம் ஆண்டளவில், இந்த வார்த்தையின் ஒவ்வொரு அர்த்தமும் பொருள்பட இந்தியா சுயசார்பு பாரதமாக பரிமளிக்க வேண்டும் என்றும் கூறினார்.