ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்றால், ஸ்டாலின் எதற்காக கொளத்தூரில் போட்டியிட வேண்டும் – குஷ்பு கேள்வி?

0
324

ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்றால், ஸ்டாலின் எதற்காக கொளத்தூரில் போட்டியிட வேண்டும் – குஷ்பு கேள்வி?

சென்னை, அ.தி.மு.க. கூட்டணியில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக நடிகை குஷ்பு களமிறக்கப்பட்டு உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நுங்கம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் குஷ்பு வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் பாஜக தொண்டர்கள் ஏராளமானோர் ஊர்வலமாக வந்தனர்.

அவர் வேட்புமனு தாக்கல் செய்த பின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

ஒரு தொகுதிக்காக வேட்புமனு தாக்கல் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது. பாஜக – அதிமுக அமைத்துள்ளது வெற்றிக் கூட்டணி. தேர்தல் களத்தில் எனக்கு உற்சாகமளிக்கும் அனைத்து கட்சியினருக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி. 2019- நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜகவிற்கு சிறுபான்மை மக்களும் வாக்களித்துள்ளனர்.

வாழ்க்கையே எனக்கு சவாலாகத்தான் இருந்துள்ளது. இந்த தேர்தல் சவாலையும் வென்று வருவேன். தோல்வி என்ற பேச்சுக்கே என் அகராதியில் இடமில்லை.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்றால், ஸ்டாலின் எதற்காக கொளத்தூரில் போட்டியிட வேண்டும். நடிகர் ரஜினிகாந்தின் ஆதரவு எப்போதும் எனக்கு உண்டு என்றார்.