அசுரன்: தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு – இயக்குனர் வெற்றிமாறன் தேசிய விருது பெற்றனர்!

0
120

அசுரன்: தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு – இயக்குனர் வெற்றிமாறன் தேசிய விருது பெற்றனர்!

டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 67ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா இன்று நடந்தது. விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் மற்றும் விருது பெறுவோர்கள் கலந்துகொண்டனர். காலை 11 மணிக்கு தொடங்கிய விருது வழங்கும் விழாவில் மொழிவாரியாக விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழில் இருந்து சிறந்த நடிகராக தனுஷும், சிறந்த துணை நடிகராக விஜய் சேதுபதியும், சிறந்த படமாக அசுரனும், சிறந்த இசையமைப்பாளராக இமானும், சிறந்த குழந்தை நட்சத்திரமாக கே.டி. என்ற கருப்புதுரையில் நடித்த நாகவிஷாலும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல், சிறப்பு ஜூரி விருதுக்கு பார்த்திபன் இயக்கிய ஒத்த செருப்பு சைஸ் 7 படம் தேர்ந்தெடுக்கப்பட்டது.

அசுரன் படத்தை தயாரித்த கலைப்புலி எஸ்.தாணு, மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் ஆகியோர் தேசிய விருதை பெற்றனர். தேசிய விருதை துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, கலைப்புலி எஸ்.தாணு மற்றும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு வழங்கினார்.

இதனையடுத்து விருது வழங்கும் விழா இன்று நடந்தது. அப்போது சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட அசுரன் படத்திற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் தாணுவும், இயக்குநர் வெற்றிமாறனும் விருதுகளை பெற்றுக்கொண்டனர். அவர்களுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கினார்.

அசுரன் படத்தை கலைப்புலி தாணு தயாரிக்க, வெற்றிமாறன் இயக்கி இருந்தார். தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

வெற்றிமாறன் தேசிய விருது பெறுவது இரண்டாவது முறையாகும். அசுரன் படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.