அகழ்வாராய்ச்சி: 5300 ஆண்டு பழமையான மண்டை ஓட்டின் மூலம் வெளியான அதிசய தகவல்!

0
73

அகழ்வாராய்ச்சி: 5300 ஆண்டு பழமையான மண்டை ஓட்டின் மூலம் வெளியான அதிசய தகவல்!

அறுவை சிகிச்சை என்பது நவீன காலத்தின் பரிசாக கருதப்பட்டாலும், அது முழுமையாக உண்மையல்ல. அகழ்வாராய்ச்சியில் வெளி வந்துள்ள சான்றுகள், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என்பதைக் காட்டுகிறது. காது கல்லறையில் இருந்து 5,300 ஆண்டுகள் பழமையான மண்டை ஓடு மூலம் அறுவை சிகிச்சைக்கான ஆதாரங்கள் வெளிவந்துள்ளது.

காது அறுவை சிகிச்சையின் ஆரம்ப சான்றுகள்

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழு ஸ்பெயினில் உள்ள ஒரு கல்லறையில் 5,300 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டைக் கண்டுபிடித்துள்ளனர். உலகிலேயே காது அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான மிகப் பழமையான சான்று இதுவாகத் தெரிகிறது என்பது இதன் சிறப்பு. இடது காதைச் சுற்றியுள்ள மண்டை ஓட்டில் பல வெட்டுக்கள் தெரிகின்றன. அதாவது வலியைப் போக்க காதைச் சுற்றி அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையில், ஸ்பானிஷ் ஆராய்ச்சியாளர்கள் , “இந்த சான்றுகள் ஒரு மாஸ்டோயிடெக்டோமி சிகிச்சை செய்யப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றன. இந்த பண்டைய கால மனிதருக்கு இடைச்செவியழற்சி மற்றும் மாஸ்டாய்டிடிஸ் ஆகியவற்றின் விளைவாக ஏற்பட்ட வலியைப் போக்க ஒரு அறுவை சிகிச்சை செய்யப்படலாம்.”

நடுத்தர வயது பெண்ணின் மண்டை ஓடு

இந்த மண்டை ஓடு புதிய கற்காலத்தில் வாழ்ந்த ஒரு நடுத்தர வயது பெண்ணுடையது என்று ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். இது Dolmen de l’Pendón எனப்படும் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்லறை ஸ்பெயினின் பர்கோஸில் அமைந்துள்ளது.

மண்டை ஓடு ஆராய்ச்சி

2016 ஆம் ஆண்டில், வல்லாடோலிட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், சுமார் 100 பேரின் எச்சங்களுடன் மண்டை ஓடு கண்டுபிடித்தனர். மண்டை ஓட்டில், அதன் மாஸ்டாய்டு எலும்புகளுக்கு அருகில் மண்டை ஓட்டின் இருபுறமும் இரண்டு துளைகள் இருப்பதற்கான ஆதாரத்தையும் காண முடிந்தது. காதில் ஏற்பட்ட திக அழுத்தத்தைக் குறைக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அராய்ச்சி தெரிவிக்கிறது.

Sources
https://zeenews.india.com/tamil/world/archaeological-survey-5300-year-old-skull-had-marks-of-ear-surgery-382964