75ஆவது சுதந்திர தினம் : மூவர்ணக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

0
106

75ஆவது சுதந்திர தினம் : மூவர்ணக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினம் நாடெங்கிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.

அந்த வகையில், சென்னை கோட்டையில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கோட்டைக்கு சென்றடைந்தவுடன் திறந்தவெளி வாகனத்தில் நின்று முப்படைகளின் உயர் அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை வரவேற்பு அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் 75-வது சுதந்திரத் திருநாளையொட்டி நடைபெற்ற காவல்துறையின் அணிவகுப்பினை பார்வையிட்டார். பின்னர் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகக் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

அதேப்போல், கோவிட் – 19 தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு, பதக்கங்களையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.