69வது பிறந்த நாள்: பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர் மரியாதை

0
96

69வது பிறந்த நாள்: பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர் மரியாதை

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) 69-வது பிறந்தநாள் ஆகும். அவர், தமிழக முதல்-அமைச்சராக பதவி ஏற்ற பின்னர் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால் தி.மு.க.வினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

சென்னையில் வாழ்த்து அரங்கம், கவி அரங்கம், கருத்தரங்கம், இசை அரங்கம், நலத்திட்ட உதவிகள் என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். இதே போன்று மற்ற மாவட்டங்களில் அந்தந்த அமைச்சர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.

இந்த நிலையில் சென்னை மெரினாவில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களுக்கு சென்ற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், அங்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

இதனைத்தொடர்ந்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலுக்கு சென்று அவரது நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.