1000 ஆண்டு பழமையான 14 மம்மிகள் கண்டுபிடிப்பு

0
152

1000 ஆண்டு பழமையான 14 மம்மிகள் கண்டுபிடிப்பு

தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இறந்து பதப்படுத்தப்பட்ட உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் லிமாவிற்கு அருகில் காஜாமார்க்கில்லா என்ற பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது ஒரு இடத்தில் மம்மி எனப்படும் பதப்படுத்தப்பட்ட 14 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6 குழந்தைகள் என்றும், 2 பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரு நாட்டு பாரம்பரியப்படி இறந்தவர்கள் வாழ்க்கை அதோடு முடிவதில்லை என்றும் அவர்கள் வேறு ஒரு உலகத்தில் பிறந்து வாழ்க்கையை தொடர்வார்கள் எனவும் நம்பப்படுகிறது.

இதனால் இறந்தவர்களின் உடலை எரிக்காமலோ அல்லது புதைக்காமலோ பதப்படுத்தி பாதுகாத்து வைப்பார்கள். அவ்வாறு பதப்படுத்தப்பட்டு களிமண் பானை உள்ளிட்டவற்றுக்குள் வைத்து பூமிக்குள் புதைக்கப்பட்டிருந்த உடல்கள் பல நூறு ஆண்டுகளுக்கு பின் தற்போது வெளியே எடுக்கப்பட்டு வருகின்றன.