நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை எண்ணி ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் – பிரதமர் மோடி!

0
53

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை எண்ணி ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் – பிரதமர் மோடி!

தேசத்துக்கு முக்கிய பங்களிப்பை அளித்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸை எண்ணி, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. நேதாஜியின் பிறந்தநாளை ஆண்டுதோறும் பராக்கிரம தினமாக மத்திய அரசு கடந்தாண்டு அறிவித்தது.

இதையொட்டி, நாடாளுமன்ற மைய மண்டப கட்டடத்தில் நேதாஜியின் சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

வழக்கமாக குடியரசு தின கொண்டாட்டங்கள் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படும் நிலையில், நேதாஜியின் பிறந்தநாளில் இருந்தே குடியரசு தின கொண்டாட்டங்கள் நடக்கும் என கடந்தாண்டே மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில் நேதாஜியின் முழு உருவ முப்பரிமாண ஒளிப்படத்தை இந்தியாகேட் பகுதியில் மாலை 6 மணிக்கு பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். விரைவில் அதே பகுதியில் நேதாஜிக்கு முழு உருவ கிரானைட் சிலையும் அமைக்கப்பட உள்ளது.