கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்கான மருந்து உற்பத்தியை அதிகரிக்கவேண்டும்: மத்திய அரசுக்கு கனிமொழி MP கடிதம்!

0
163

கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்கான மருந்து உற்பத்தியை அதிகரிக்கவேண்டும்: மத்திய அரசுக்கு கனிமொழி MP கடிதம்!

கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணம் பெற்று வருபவர்களை மியூகார்மை கோசிஸ் என்ற கருப்பு பூஞ்சை நோய் தாக்குவது தற்போது இந்தியாவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கருப்புப் பூஞ்சை நோய்த் தொற்று அதிகரித்து வரும் சூழலில் அதன் சிகிச்சைக்கான மருந்து உற்பத்தியை அதிகரிக்குமாறும் தட்டுப்பாட்டைப் போக்குமாறும் தூத்துக்குடி மக்களவை எம்.பி. கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து தி.மு.க. மக்களவை கழகக் குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி. மத்திய அரசுக்கு அவசர கவன ஈர்ப்புக் கடிதம் எழுதியுள்ளார். மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், மத்திய வேதியியல் துறை அமைச்சர் சதானந்த கவுடா, மத்திய வேதியியல் அமைச்சகத்துக்கு உட்பட்ட மருந்துத்துறையின் செயலாளர் திருமதி அபர்ணா ஆகியோருக்கு தனித்தனியாக கனிமொழி எம்.பி. கடிதங்கள் எழுதியுள்ளார்.

அக்கடிதங்களில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: – தற்போது நம் நாட்டில் மியூகார்மை கோசிஸ் அல்லது கருப்பு பூஞ்சை நோய் தொற்று அதிகரித்து வருகிறது என்பதை தாங்கள் அறிவீர்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வரும் நோயாளிகளை இந்த கருப்புப்பூஞ்சை நோய்த் தொற்று முக்கியமாக பாதிக்கிறது. தற்போது கொரோனாவின்

“கருப்புப் பூஞ்சை சிகிச்சைக்கான மருந்து உற்பத்தியை அதிகரிக்கவேண்டும்”: மத்திய அரசுக்கு கனிமொழி MP கடிதம்!
இரண்டாவது அலைப்பரவலுக்கு இடையே, நாட்டில் மியூகார்மை கோசிஸ் தொற்றின் விகிதமும் அதிகரித்து வருகின்றது. ராஜஸ்தான் மாநிலம் ஏற்கனவே மியூகார்மைகோசிஸ் என்கிற கருப்புப் பூஞ்சையை ஒரு தொற்றுநோயாக அறிவித்துவிட்டது.

இந்நிலையில், கருப்புப் பூஞ்சைத் தொற்றுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் லிபோசோமல் ஆம்போடெரிசின் பி அல்லது ஆம்போடெரிசின் பி ஆகிய மருந்துகளின் விநியோகம் மெல்லக் குறைந்து வருகிறது. இம்மருந்துகளுக்கான தேவை நாடு முழுவதும் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த மருந்து தமிழகத்திலும் பற்றாக்குறையாக இருக்கிறது. எனவே கருப்புப் பூஞ்சைக்கு எதிராக தேவைப்படும் இந்த மருந்து விநியோகத்தை விரைவுபடுத்திட அவசர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேற்கண்ட இந்த முக்கிய மருந்துகளின் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இந்த மருந்துகளின் உற்பத்திக்குத் தேவையான முக்கியமான மூலக்கூறு மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்யவும் உரிய அனுமதிகளை அளித்து, எந்த இடையூறும் இல்லாமல் மருந்துகளின் தயாரிப்புக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.