எல்பிஜி கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு…! தொடர் உயர்வில் விலைகள்…!! கணிசமாக உயரும் மாதாந்திர பட்ஜெட் செலவுகள்!!!!

0
260

எல்பிஜி கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வு…!
தொடர் உயர்வில் விலைகள்…!!
கணிசமாக உயரும் மாதாந்திர பட்ஜெட் செலவுகள்!!!!

சென்னை, சென்னையில் 137 நாட்களுக்கு பின் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 76 காசுகள் உயர்ந்து 102.16 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 76 காசுகள் உயர்ந்து 92.19 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலையை போன்று பல மாதங்களுக்கு பின் சென்னையில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் கடந்த 5 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 917 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

முக்கிய நகரங்களில் பெட்ரோல், டீசல் விலை

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.95.41 ஆகவும், டீசல் விலை ரூ.86.67 ஆகவும் உள்ளது. மும்பையில், தற்போது பெட்ரோல் விலை ரூ.109.98 ஆகவும், டீசல் விலை ரூ.94.14, ஹைதராபாத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.109.10 ஆகவும், ஹைதராபாத்தில் ஒரு லிட்டர் உள்ளது. விஜயவாடாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ டீசல் ரூ. 96.83. ஆகவும் விற்பனையாகிறது என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இணையதளத்தில் உள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், 5 மாதங்களுக்கு பின் தற்போது சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 965 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் 14.2 கிலோ எடையுள்ள மானியம் இல்லாத எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.949.50 ஆக உள்ளது.

தெலுங்கானாவில் சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.1000ஐ தாண்டியுள்ளது.

5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலை இப்போது ரூ. 349, 10 கிலோ எடையுள்ள கலப்பு பாட்டிலின் விலை ரூ. 669. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை தற்போது ரூ. 2003.50. எரிவாயு விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வரும் என எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவில்  பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும், சமையல் எண்ணெய், காபி தூள், டீ தூள், நூடுல்ஸ் என பல்வேறு வகை உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் சாமானியர்களின் மாதாந்திர பட்ஜெட் செலவுகள் கணிசமாக அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி அதிர்ச்சியடைந்துள்ளனர்.