ஆவின் பாலில் ‘விஞ்ஞான விலை உயர்வு’! மக்கள் நீதி மய்யம் கண்டனம்!!

0
238

ஆவின் பாலில் ‘விஞ்ஞான விலை உயர்வு’! மக்கள் நீதி மய்யம் கண்டனம்!!

அதிமுக ஆட்சியில் டீலக்ஸ் பேருந்து?

திமுக ஆட்சியில் ‘டீ மேட் பால்’

ஆரஞ்சுப் பாக்கெட்டிற்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதைவிட லிட்டருக்கு ரூ.12 அதிகவிலையுள்ள “டீ மேட்” பால்பாக்கெட்டை கட்டாய விற்பனை செய்வதாக ஆவின் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதிமுக ஆட்சியில் “டீலக்ஸ் பேருந்து”! திமுக ஆட்சியில் “டீ மேட் பால்”?. மக்களின் தலை மீது மறைமுக விலையேற்றும் கழகங்களின் “விஞ்ஞான விலையேற்றத்தை” மக்கள் நீதி மய்யம் கண்டிக்கிறது. அமைச்சரும், அதிகாரிகளும் ஆரஞ்சுப் பாக்கெட் செயற்கைத் தட்டுப்பாட்டை நீக்கவும், “டீ மேட்” பாக்கெட் கட்டாய விற்பனையைத் தடுத்துநிறுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.