அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உதவியாளராக இந்தியர் நியமனம்

0
262

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உதவியாளராக இந்தியர் நியமனம்

வாஷிங்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், மஜு வர்க்கீஸ். இவர், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கிய ஜோ பைடனின் பிரசார நடவடிக்கைகளுக்கான தலைமை செயல் அதிகாரியாகவும், மூத்த ஆலோசகராகவும் செயல்பட்டவர்.

தேர்தல் வெற்றிக்கு பின்னர் ஜனாதிபதி ஜோ பைடன், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு தொடர்பான ஏற்பாடுகளை கவனித்த தொடக்க குழுவின் 4 உறுப்பினர்களில் ஒருவராகவும் மஜு வர்க்கீஸ் பணியாற்றினார்.