ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சார்பில் 5 வீரர்கள் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஜூனியர் ஆண்கள் டாப்ஸ் என்சிஓஇ முகாமுக்கு தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளதற்கு திருமதி. கனிமொழி கருணாநிதி எம்.பி மற்றும் ஸ்ரீ சேகர் ஜே.மனோகரன் ஆகியோர் வீரர்களை வாழ்த்தினர்.
சமீபத்தில் கோவில்பட்டியில் நடைபெற்ற 11-வது ஹாக்கி இந்தியா ஜூனியர் ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டிகள் தூத்துக்குடி தொகுதி எம்.பி , திருமதி.கனிமொழி கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு சார்பில் ஆர்.நிஷி தேவ அருள், வி.அரவிந்த், ஆர்.கவியரசன், பி.சதீஷ், என்.திலீபன் ஆகிய 5 வீரர்கள் நேஷனல் சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் ஜூனியர் ஆண்கள் டாப்ஸ் என்சிஓஇ முகாமுக்கு தேசிய அளவில் தமிழ்நாடு அணியில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
பயிற்சி முகாமுக்கு செல்லும் வீரர்களை திருமதி. கனிமொழி கருணாநிதி எம்.பி அவர்கள் தூத்துக்குடியில் உள்ள அவரது அலுவலகத்தில் வீரர்களை வாழ்த்தினார்.
ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு தலைவர் திரு.சேகர் ஜே மனோகரன், தூத்துக்குடி மண்டல முதுநிலை மேலாளர் திரு.பிராங்க் பால் ஜெயசீலன், தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு.பேட்ரிக் மற்றும் தமிழ்நாடு ஜூனியர் ஆண்கள் அணி மற்றும் கோவில்பட்டி எக்ஸலன்ஸ் சென்டர் பயிற்சியாளர் திரு.முத்துக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.