வாகனத்தை நிறுத்தச்சொல்லி மாணவர்களுடன் நேரில் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்

0
123

வாகனத்தை நிறுத்தச்சொல்லி மாணவர்களுடன் நேரில் உரையாடிய முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை மெரினாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அலங்கார ஊர்திகளை பார்வையிட்ட பள்ளி மாணவர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடி, செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

இந்திய விடுதலை போரில் தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு, சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்துகொண்ட ‘விடுதலைப் போரில் தமிழகம்’ என்ற மூன்று அலங்கார ஊர்திகளை சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலை, விவேகானந்தர் இல்லம் அருகே பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அலங்கார ஊர்திகளை பள்ளி மாணவர்கள் கண்டுகளித்து கொண்டிருந்ததை பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வாகனத்தை நிறுத்தச் சொல்லி மாணவர்களுடன் கலந்துரையாடி செல்ஃபி எடுத்துக் கொண்டார்.