முதியோர்களுக்கு இல்லம் தேடி பூஸ்டர் டோஸ் : சென்னை மாநகராட்சி ஏற்பாடு

0
133

முதியோர்களுக்கு இல்லம் தேடி பூஸ்டர் டோஸ் : சென்னை மாநகராட்சி ஏற்பாடு

சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு, அவர்களின் இல்லத்திற்கே சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

60 வயதை கடந்த ஒரு டோஸ் செலுத்தாதவர்களுக்கும், இரண்டாவது டோஸ் செலுத்த காலம் கடந்தவர்களுக்கும், நேரடியாக இல்லம் சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

எனவே, குறிப்பிட்ட தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு இல்லங்களிலேயே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.