ஜெயம் ரவி ‘பிரதர்’ படம் குறித்தும் தன் குடும்பத்தில் தற்பொழுது நிகழும் சூழல் பற்றியும் செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டார்.
நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய முடிவு செய்து கோர்ட்டில் விவாகரத்து வழக்கும் தொடர்ந்து இருக்கிறார். இதற்கு தன்னிடம் சம்மதம் கேட்காமல் விவாகரத்து முடிவு எடுத்துள்ளதாக அவரது மனைவி ஆர்த்தி அறிக்கையில் கூறியிருந்தார்.
இதனையடுத்து, ஜெயம் ரவிக்கும் பாடகி கெனிஷா பிரான்சிசுக்கும் பழக்கம் இருப்பதனாலேயே மனைவியை பிரிய முடிவு செய்துள்ளதாக இணையத்தில் வதந்தி பரவிய நிலையில், திரையுலகில் எந்தவித சர்ச்சைகளிலும் சிக்காத நடிகர், அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக அவரது திருமண வாழ்க்கை குறித்தான விஷயங்கள் அவரே முன் வந்து தெளிவுபடுத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது:
‘நான் எடுத்த விவாகரத்து முடிவு மனைவி ஆர்த்திக்கு தெரியாது என்பதில் எந்த லாஜிக்கும் இல்லை, கூறிய கருத்தும் தவறானது. சமூக வலைத்தளத்தில் அறிவிப்பதற்கு முன்பே இரண்டு முறை ஆர்த்திக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தேன். அவர்கள் தரப்பில் எங்கள் வீட்டில் வந்து பேசியும் இருக்கிறார்கள். அதன்பின்னர் தான் முறைப்படி மீடியாவில் இந்த தகவலை வெளியிட்டேன். மனைவி அறிக்கைக்கு பதிலடி கொடுக்குமாறு கூறினார்கள். ஆனால் நான் தான் மறுத்து விட்டேன். மகன்களுக்காக அமைதியாக இருக்கிறேன். சட்டரீதியாக செல்ல நினைக்கிறேன். முன்பு ஒரு நடிகையுடன் தொடர்பு படுத்தி பேசினார்கள் அவர் நிச்சயம் செய்து கொண்டு போய் விட்டார். இப்பொழுது பாடகியுடன் என்னை தொடர்புபடுத்தி பேசுவது, பேசியவர்களுக்குத்தான் அசிங்கம். பாடகி ஒரு சைக்காலஜிஸ்ட். மன அழுத்தத்தில் இருந்த எத்தனையோ பேரை காப்பாற்றி இருக்கிறார். என் நீண்ட நாள் ஆசை ஆன்மிக மையம் ஆரம்பிக்க வேண்டும் என்பதே. அதற்காகத்தான் அந்த பாடகியுடன் பயணிக்கிறேன்.
எனக்கு என்று எதையும் ஆர்த்தி வீட்டிலிருந்து எடுத்துவரவில்லை. நான் அணிந்த உடையுடன் வெளியே வந்து விட்டேன். நான் கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்தேன், நான் நினைத்த இடத்திற்கு செல்ல உரிமை உள்ளது. நான் எடுக்கும் முடிவில் எந்த விஷயத்திலும் என் பெற்றோர்கள் தலையிடுவதில்லை எந்த முடிவு எடுத்தாலும் நான் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதே அவர்களது விருப்பம்.
என்னுடைய இரண்டு மகன்களில், மூத்த மகனுக்கு விவகாரத்து விஷயம் தெரியும், இளைய மகனுக்கு புரிய வைக்க வேண்டும். இருப்பினும் சூழல் காரணமாக நான் ஆர்த்தியை பிரிய முடிவு செய்துள்ளேன். சமீபத்தில் கூட எனது மகனின் பிறந்தநாளை குடும்பத்துடன் சேர்ந்தே கொண்டாடினோம். அதேநேரம் எனது மகன்களை நான் என்றைக்கும் கைவிடும் எண்ணம் கிடையாது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை இனிமேல் நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும், நான் சட்டத்தை நம்புகிறேன். நியாயம் கிடைக்கும் அப்போது பல உண்மைகள் புரிய வரும் தெளிவு பெரும்”.
ALSO READ:
‘இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் நடிக்க ஆசை’ – புதிய தன்னம்பிக்கையுடன் ஜெயம் ரவியின் அதிரடி பேட்டி
‘இயக்குனர் வெற்றிமாறன் படத்தில் நடிக்க ஆசை’ – புதிய தன்னம்பிக்கையுடன் ஜெயம் ரவியின் அதிரடி பேட்டி