நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாள் ஜனவரி 23 முதல் ஒரு வருடத்திற்கு கொண்டாடப்படும்

0
503

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாள் ஜனவரி 23 முதல் ஒரு வருடத்திற்கு கொண்டாடப்படும்

புதுதில்லி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாள் ஜனவரி 23 முதல் ஒரு வருடத்திற்கு கொண்டாடப்படும் என்று மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் திரு பிரகலாத் சிங் பட்டேல் இன்று அறிவித்தார்.

கொல்கத்தாவில் நடைபெறவிருக்கும் தொடக்க விழாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையேற்பார் என்று புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தெரிவித்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நாட்டுக்கு ஆற்றியுள்ள தன்னலமற்ற சேவையையும், அவரது அணையாத விடுதலை உணர்வையும் போற்றும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஜனவரி 23-ஐ “பராக்கிரம தினமாக” கொண்டாட மத்திய அரசு முடுவெடுத்துள்ளது என்றும் இதற்கான அரசிதழ் அறிவிப்பும் வெளியிடப்பட்டுவிட்டது என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் பேசிய அமைச்சர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளை 2021 ஜனவரி 23 முதல் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பான முறையில் கொண்டாட அரசு முடிவெடுத்துள்ளது என்றார்.

நிகழ்ச்சிகள் குறித்து முடிவெடுப்பதற்கும், கொண்டாட்டங்களை மேற்பார்வையிட்டு வழிகாட்டுவதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்று திரு பட்டேல் தெரிவித்தார்.