நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னையில் வெறும் 3.9% வாக்குப்பதிவு | மாவட்ட வாரியாக காலை 9 மணி நிலவரம்

0
105

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னையில் வெறும் 3.9% வாக்குப்பதிவு | மாவட்ட வாரியாக காலை 9 மணி நிலவரம்

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், சென்னையில் மிக மந்தமாக வாக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் மிக மிகக் குறைவாக வெறும் 3.96% வாக்குகள் பதிவாகியுள்ளன.

9 மணி வாக்குப்பதிவு நிலவரம் மாவட்ட வாரியாக:

மாவட்டம் வாக்குப்பதிவு சதவீதம்
சென்னை 3.96%
பெரம்பலூர் 9.77%
கோவை 6.79%
நாகை 8.05%
திருப்பூர் 7.75%
மயிலாடுதுறை 9.02%
சேலம் 12.97%
காஞ்சிபுரம் 11.02%
நாமக்கல் 12.75%
திருச்சி 13.00%
கடலூர் 10.11%
கன்னியாகுமரி 7.00%
ராணிப்பேட்டை 7.70%
தென்காசி 12%
புதுக்கோட்டை 10.74%
ராமநாதபுரம் 8.88%
திருவாரூர் 10.25%
அரியலூர் 12.84%
கிருஷ்ணகிரி 9.31%
தேனி 12.00%
விழுப்புரம் 11.37%
மதுரை 24.62%

வாக்குப்பதிவு தொடங்கி முதல் 2 மணி நேரத்தில் தலைநகர் சென்னையில் தான் மிக மிகக் குறைவான அளவில் வாக்குப்பதிவாகியுள்ளது. திருச்சி, அரியலூர் போன்ற மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.