நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான டெபாசிட் தொகை எவ்வளவு… தேர்தலில் எவ்வளவு செலவிடலாம்?

0
66

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான டெபாசிட் தொகை எவ்வளவு… தேர்தலில் எவ்வளவு செலவிடலாம்?

Deposit amount : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவின கணக்குகளை, வாக்கு எண்ணிக்கை முடிந்த நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கும் நிலையில், வேட்பாளர்களுக்கான டெபாசிட் தொகை எவ்வளவு, தேர்தலில் எவ்வளவு செலவிடலாம் என்பதை பார்க்கலாம்.

நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான டெபாசிட் தொகை இரண்டு மடங்கு உயர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கான வைப்புத்தொகை 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே பிரிவினர், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 1000 ரூபாயும், மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 2 ஆயிரம் ரூபாயும் டெபாசிட் தொகை செலுத்த வேண்டும். இதர வகுப்பைச் சேர்ந்தவர்கள், பேரூராட்சி கவுன்சிலருக்கு ஆயிரம் ரூபாயும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 2 ஆயிரம் ரூபாயும் கட்ட வேண்டும்.

மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 4,000 ரூபாயை செலுத்தி, வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவின கணக்குகளை, வாக்கு எண்ணிக்கை முடிந்த நாளில் இருந்து ஒரு மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள், பிரசாரத்திற்காக 17,000 ரூபாய் வரை செலவிடலாம்.

முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சிகளில் வார்டு உறுப்பினராக போட்டியிட விரும்புவோர், 34,000 ரூபாய் வரை செலவு செய்ய அனுமதிக்கப்படுகிறது. தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு களமிறங்குபவர்களும், சென்னையை தவிர்த்து பிற மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்களும் 85,000 ரூபாய் வரை செலவிடலாம்.

பெருநகர சென்னை மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்பாளர்கள் 90,000 ரூபாய் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது..

தேர்தல் டெபாசிட் தொகை:

ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின வேட்பாளர்கள்

பேரூராட்சி கவுன்சிலர் – ரூ.500

நகராட்சி கவுன்சிலர் – ரூ.1000

மாநகராட்சி கவுன்சிலர் – ரூ.2000

இதர பிரிவைச் சேரந்த வேட்பாளர்கள்

பேரூராட்சி கவுன்சிலர் – ரூ.1000

நகராட்சி கவுன்சிலர் – ரூ.2000

மாநகராட்சி கவுன்சிலர் – ரூ.4000

வேட்பாளர்கள் எவ்வளவு செலவிடலாம்?

பேரூராட்சி வார்டு உறுப்பினர் – ரூ.17,000

நகராட்சி வார்டு உறுப்பினர் (முதல் மற்றும் 2ம் நிலை) – ரூ.34.000

நகராட்சி வார்டு உறுப்பினர் (தேர்வு நிலை மற்றும் சிறப்பு நிலை) – ரூ.85,000

மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் (சென்னையை தவிர) – ரூ.85,000

சென்னை மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் – ரூ.90,000