தொழில்நுட்பத்தின் பிரதான குறிக்கோள் மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும் – குடியரசு துணைத் தலைவர்

0
108

தொழில்நுட்பத்தின் பிரதான குறிக்கோள் மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும் – குடியரசு துணைத் தலைவர்

குடியரசு துணைத் தலைவர் திரு.எம்.வெங்கையா நாயுடு இன்று விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள், தொழில் முனைவோர் ஆகியோர் அறிவு வளத்தை உருவாக்கி மனிதகுல முன்னேற்றம் மற்றும் சமுதாய மேம்பாட்டுக்காக புதிய சிந்தனைகள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தினார்.

பெங்களூருவில் பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாடு 2021-ஐ தொடங்கி வைத்த திரு.நாயுடு, தொழில்நுட்பத்தின் பிரதான குறிக்கோள் மக்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மக்களை அழுத்தும் பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்டு அவர்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், வசதியாகவும் மேற்கொள்ள தொழில்நுட்ப மேம்பாட்டை உருவாக்க வேண்டுமென்று அவர் வலியுறுத்தினார்.

பல பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட தொழில்நுட்ப இடையூறுகள் பற்றி கூறிய குடியரசு துணைத் தலைவர், தொழில்நுட்பத்தில் உண்மையான ஆற்றல், மேலாண்மை, கல்வி, மருத்துவச் சிகிச்சை, நிர்வாகம், பருவநிலை மாற்றம் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொண்டு வருவதாக இருக்க வேண்டுமென்று தெரிவித்தார்.

சீர்திருத்தி, செயல்படுத்து, மாற்று என்னும் பிரதமரின் 3 சொல் மந்திரத்தை குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர் வரும் நாட்களில் நாம் பொருளாதார அறிவு, டிஜிட்டல்மயமாக்கம், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

பிடிஎஸ் 2021-ல் காணொலி மூலம் கலந்து கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் திரு.ஸ்கார்ட் மாரிசன், இஸ்ரேல் பிரதமர் திரு.நப்தாலி பென்னட் ஆகியோருக்கு குடியரசு துணைத் தலைவர் நன்றி தெரிவித்தார்.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் அகால மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் இரங்கல் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கர்நாடக ஆளுநர் திரு தாவர் சந்த் கெலாட், முதலமைச்சர் திரு.பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் திரு.ராஜீவ் சந்திரசேகர், மாநில அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.