துபாயில் முதல் நாளன்றே மாஸ் காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்!!

0
230

துபாயில் முதல் நாளன்றே மாஸ் காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்! பிரமிக்க வைக்கும் புகைப்படங்கள்!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (25.3.2022) துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் (Dubai International Financial Centre) ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு அப்துல்லா பின் டூக் அல் மர்ரி அவர்களையும், ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி அவர்களையும் சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பின்போது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு நிலவும் சாதகமான சூழ்நிலையை எடுத்துக்கூறி, ஐக்கிய அரபு அமீரகத்தின் இரு அமைச்சர்களையும் தமிழகம் வருமாறு அழைப்பு விடுத்தார்.

மேலும், தமிழகத்தில் தொழில் தொடங்கிட, முதலீட்டாளர்கள் குழுவினையும் தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.