‘திராவிட இயக்கத்தின் போர்வாளைச் சந்தித்தேன்’: வைகோவை சந்தித்தது குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி!

0
99

‘திராவிட இயக்கத்தின் போர்வாளைச் சந்தித்தேன்’: வைகோவை சந்தித்தது குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி!

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுக்கு அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. இதையடுத்து கொரோனா தொற்றுக்கான சிகிச்சைபெற்று, தெற்றிலிருந்து குணமடைந்துள்ளார்.

இதையடுத்து, வைகோ தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார். இதனால் அவர் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரச்சாரங்களில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில், சென்னை அண்ணாநகரில் உள்ள வைகோ இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவரது உடல் நிலம் குறித்துக் கேட்டறிந்தார்.

பின்னர் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,”திராவிட இயக்கப் போர்வாளாக விளங்கும் அண்ணன் வைகோ அவர்கள் கொரோனா தொற்றிலிருந்து மீண்ட நிலையில், அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். கொள்கை மறவராக விளங்கும் அவரது பொதுவாழ்வு மேலும் சிறக்க விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.