தமிழக சட்டசபை தேர்தல் 2021: திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று

0
184

தமிழக சட்டசபை தேர்தல் 2021: திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று

திமுக மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைபடுத்திக்கொண்டுள்ளார்.

நேற்று ராஜபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர், நேற்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், கனிமொழி தீவிரமாக ஈடுபட்டடு வந்த நிலையில், அவருக்கு லேசான தொண்டை வலி இருந்ததால் அவர், கொரோனா சோதனை மேற்கொண்டதில், தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.