சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் 130 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

0
220

சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் 130 ஆக்சிஜன் படுக்கைகளுடன் கொரோனா சிகிச்சை மையம் திறப்பு

கொரோனா 2-வது அலையில் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்படுபவர்களுக்கு பெரும்பாலும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அவர்களை காப்பாற்ற ஆக்சிஜன் படுக்கைகள் பெருமளவு தேவைப்படுகிறது. இதையடுத்து ஆக்சிஜன் படுக்கைள், தமிழகம் முழுவதும் பல இடங்களில் துரிதமாக அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியுடனான 130 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஏற்கனவே சென்னை ராயப்பேட்டை வெஸ்லி மேல்நிலைப் பள்ளியில், உயிர்வளி வசதியுடன் 130 படுக்கைகள் கொண்ட #COVID19 சிறப்புச் சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்து ஆய்வு செய்தார்.

அதே போல் சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு #CovidVaccine முகாமைத் தொடங்கி வைத்தார்.